Friday, 28 October 2016

கபாலி 100வது நாள் விழா... ரசிகர்கள் சார்பில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு பரிசளித்த தன்ஷிகா!

                                                          
சூப்பர் ஸ்டார் ரஜினியின் மிகப் பெரிய வெற்றிப் படமான கபாலியின் 100 வது நாளையொட்டி, ஆதம்பாக்கத்தில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கு ரசிகர்கள் சார்பில் இனிப்பு, உணவு, பட்டாசுகள் மற்றும் பரிசுகள் வழங்கினார் நடிகை சாய் தன்ஷிகா.
கடந்த ஜூலை 22-ம் தேதி வெளியான ரஜினியின் கபாலி படம், இந்திய சினிமா சரித்திரத்தில் புதிய வசூல் சாதனைகளைப் படைத்து வெற்றி வாகை சூடியது. சர்வதேச அளவிலும் பல சாதனைகளைப் படைத்த ஒரே தமிழ்ப் படம் கபாலி.
வரும் தீபாவளி தினமான அக்டோபர் 29 அன்று கபாலி 100 நாட்களை நிறைவு செய்கிறது. இந்த நூறாவது நாள் விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, ரஜினியின் முரட்டு பக்தர்கள் குழு சார்பாக ஆதம்பாக்கத்தில் உள்ள 100 ஆதரவற்ற குழந்தைகளுக்கு புத்தாடைகள், பட்டாசு, உணவு, இனிப்பு, நோட்டுப் புத்தகங்கள் வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் கபாலி படத்தில் ரஜினிக்கு மகளாய் நடித்த சாய் தன்ஷிகா பங்கேற்று ரசிகர்கள் சார்பில் குழந்தைகளுக்கு அனைத்துப் பரிசுகளையும் வழங்கினார்.

Share:

கோர முகத்தால் அவமானப்பட்ட நபர்! இன்று உலகமே பாராட்டும் பிரபலம்

                                                                        
கோரமான முகத்துடன் உயரம் குறைவாக பிறந்து பலரால் வெறுக்கப்பட்ட ஒரு மனிதர் இன்று பொப் ஸ்டாராக உயர்ந்துள்ளார்.
உகாண்டா நாட்டில் வசித்து வருபவர் காட்ஃப்ரே பாகுமா (47) இவர் பிறக்கும் போதே வினோத தலை, குள்ள உருவம், கோர முகம் என ஒரு வித ஊனத்துடனே பிறந்துள்ளார்.
இவரின் உருவத்தை வைத்து இவரை பலர் கேலி, கிண்டல் செய்து ஒதுக்கி வைத்துள்ளனர்.
இவருக்கு சிறு வயதிலிருந்தே பாடுவதில் அதிக ஆர்வம் இருந்திருக்கிறது. தனது கடின முயற்சியால் இன்று உகாண்டாவில் பிரபல பொப் பாடகராக இவர் திகழ்கிறார்.
இது பற்றி காட்ஃப்ரே பாகுமா கூறியதாவது, நான் இப்படி பிறந்ததால் சிறு வயதிலிருந்தே என்னை எல்லோரும் வினோதமாக தான் பார்ப்பார்கள்.
                                                                          
ஆது எனக்கு பின்னர் பழகிவிட்டது. எனக்கு சிறு வயதிலிருந்தே இசையில் ஆர்வம் அதிகம்.
என் திறமையை பார்த்து எனக்கு பலர் பாட வாய்ப்பு வழங்கினார்கள். பின்னர் நான் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டேன். எனக்கு இரண்டு குழந்தைகள் பிறந்த பின்னர் என் மனைவி என்னை விட்டு போய்விட்டார்.
பிறகு இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு தற்போது மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறேன்.
என்னுடைய இசைக்கு தற்போது மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. இந்த இசை துறையில் இன்னும் நான் சாதிப்பேன் என அவர் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.
Share:

அப்பாடா.. என்ன கண்டுபிடிப்பு..! உஷாரா இருங்க.. உற்சாகமா கொண்டாடுங்க..!!

                                                             
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நாளை வெகு விமர்சியாக கொண்டாடப்பட உள்ளது. குழந்தைகள் முதல் பெரியோர் வரை புதிய உடைகளை அணிந்தும், இனிப்புகளை பகிர்ந்தும், பட்டாசுகளை வெடித்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர்.
இந்நிலையில், பட்டாசுகளை வெடிக்கும்போது, சில பேருக்கு தீக்காயங்களும், கண் பார்வை இழப்புகளும் கூட ஏற்படுவதுண்டு. மேலும், ராக்கெட் போன்ற பட்டாசுகளின் விளைவால் வீடுகள் மீது விழுந்து பெரும் தீவிபத்துகள் ஏற்படுவதும் குறிப்பிடத்தக்கது.
எனவே, படத்தில் இருப்பதுபோன்று எல்லா பெற்றோர்களும் உஷாரா இருந்தா இந்த தீபாவளியும் மகிழ்ச்சிகராமாகவே இருக்கும்.
Share:

விமானம் வெடித்து சிதறும்: பிலிப்பைன்ஸ் ஜனாதிபதிக்கு கடவுள் விடுத்த எச்சரிக்கை

                                                                         
பிலிப்பைன்ஸ் நாட்டு ஜனாதிபதி பயணம் செய்த விமானத்தை வெடிக்க வைத்துவிடுவேன் என கடவுள் அவரிடம் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியான Rodrigo Duterte ஜப்பான் நாட்டில் தனது பயணத்தை முடித்துக்கொண்டு தாய்நாட்டிற்கு விமானத்தில் புறப்பட்டுள்ளார்.
தாய்நாட்டிற்கு திரும்பிய பிறகு Davao என்ற நகரில் ஜனாதிபதி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.
அப்போது, ‘விமானத்தில் அமர்ந்திருந்தபோது கடவுள் என்னிடம் பேசினார்.
இனிவரும் காலங்களில் யாரையும் தீய வார்த்தைகளில் திட்டக்கூடாது என சத்தியம் செய்ய வேண்டும்.
இல்லையெனில், விமானத்தை உடனடியாக வெடிக்க வைத்து விடுவேன் என கடவுள் என்னை எச்சரித்தார்.
இதனால், இனிவரும் காலங்களில் யாரையும் திட்ட மாட்டேன் என கடவுளிடம் சத்தியம் செய்துவிட்டேன்.
கடவுள் மீது நான் செய்துள்ள இந்த சத்தியம் குடிமக்கள் மீது செய்த சத்தியத்திற்கு சமமாகும்’ என பேட்டியளித்துள்ளார்.
அதே சமயம், கடவுள் மீது செய்த இந்த சத்தியமானது ஒரு எல்லைக்குட்பட்டது மட்டும் தான் எனவும் ஜனாதிபதி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் அமெரிக்க ஜனாதிபதியான ஒபாமாவை ‘விலைமாதுவின் மகன்’ என பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி கடுமையாக விமர்சனம் செய்தது குறிப்பிடத்தக்கது.

Share:

ஆண் பாலியல் பொம்மைகள் விற்பனை..!! இளம்பெண்கள் மத்தியில் குதுகலம்..!!

                                                            
இயற்கையான உறவுக்கு மாறாக தற்போது இளைஞர்களிடம் பாலியல் பொம்மைகள் மீதான ஆர்வம் அதிகரித்து காணப்படுகிறது.
இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களை கவரும் விதமாக சிலிகானால் வடிவமைக்கப்படுகிறது இந்த பொம்மைகள். அவர்களது விருப்பத்திற்கு ஏற்றபடி இவை செயல்படும் என்பதால் சந்தையில் படுஜோராக விற்பனையாகி வருகிறது.
இதுவரையில் பெண் பாலியல் பொம்மைகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இப்போது ஆண் பாலியல் பொம்மைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
Karley Sciortino இந்த பொம்மையுடன் உறவு கொள்வது போன்ற வீடியோ வெளியாகியுள்ளது.
இந்த பொம்மைகள் ஆரம்ப விலையாக 5900 அமெரிக்க டாலரில் இருந்து 8000 டாலர் வரை விற்பனை செய்யப்படுகின்றன.
Share:

சமூக வலைத்தளத்தையே அதிர வைத்த பைரவா டீசர்- இப்படி ஒரு சாதனையா?

                                                            
இளைய தளபதி விஜய் என்றாலே சாதனைகளை முறியடிப்பவர் தானே. நேற்று மாலை அனைவரும் எதிர்ப்பார்த்த பைரவா டீசர் வெளிவந்தது.
டீசர் வெளிவந்த ஒரு சில நிமிடங்களிலேயே பேஸ்புக், டுவிட்டர் என அனைத்தும் ஸ்தம்பித்தது, பைரவா வெளிவந்த ஒரு மணி நேரத்தில் 70 ஆயிரம் லைக்ஸுகளை பெற்றது.
தற்போது 1.3 லட்சம் லைக்ஸுகளை தாண்டி கலக்கி வருகின்றது, மேலும் விஜய் ரசிகர்களுக்கு பைரவா டீசர் மிகவும் பிடித்துவிட்டதால் ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.
மேலும் டீசர் எந்த இடத்திலும் கதையை கணிக்க முடியாத படி உள்ளது, படத்தில் இரண்டு விஜய்யா? என்று ஒரு குழப்பம் நீடிக்கின்றது.
பரதன் என்றாலே வசனம் தான் பேமஸ், அந்த வகையில் ‘நீ வசூல் மன்னனா?’ என்று கேட்க விஜய் ‘அப்படித்தான் ஊருக்குள்ள சொல்றாங்க’ என சொல்லும் இடம் தியேட்டரே அதிரும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.

Share:

Thursday, 27 October 2016

புகலிடம் தேடி கணவனுடன் சென்ற பெண்..!! கதி என்ன தெரியுமா? கொடூரம்!!

                                                            
சுவிட்சர்லாந்தில் ரஷ்யாவை சேர்ந்த பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த பிணமாக   கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
St. Gallen, Bronschofen பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தான் 34 வயதான ரஷ்யா பெண் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். போலீஸார் நடத்திய விசாரணையில், உயிரிழந்த அந்த பெண் புகலிடம் கோரி கணவன், மகளுடன் சுவிஸ்சில் வாழ்ந்து வந்துள்ளார் என தெரியவந்துள்ளது.
அந்த பெண் சடலமாக கிடந்ததை பார்த்த பக்கத்து வீட்டுக்காரர் போலீஸுக்கு தகவல் அளித்துள்ளார். உடனே விரைந்து வந்த அதிகாரிகள் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து, விசாரனை நடத்திய போலீஸார் உயிரிழந்த பெண்ணின் 43 வயதான கணவரை தற்போது கைது செய்யதுள்ளனர்.
Share:
Copyright © Tamil Web Paper